ஹெரோயினுடன் ஒருவர் கைது ..!

பிலியந்தளை- மடப்பாத்த – படுவந்தர பகுதியில் 3 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய சந்தேகநபர் உந்துருளியில் பயணித்த போது கைது செய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இதன்போது, அவரிடமிருந்து 3 கிலோ 250 கிராம் அடங்கிய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டார்.